தினம் ஒரு தகவல் : இந்தியாவின் பெருமை


தினம் ஒரு தகவல் : இந்தியாவின் பெருமை
x
தினத்தந்தி 31 Oct 2019 8:50 AM GMT (Updated: 31 Oct 2019 8:50 AM GMT)

கணக்கிடுவதற்கு மிக தேவையான, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது இந்தியா. கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

கி.மு. நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

ஆயுர்வேதம்தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர் கண்டுபிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் இங்கு ஊடுருவும் முன்பு, இந்தியா பணக்கார நாடாகத்தான் திகழ்ந்தது. சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி.5-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்துவிட்டார்.

கணித சாஸ்திரத்தில், பை என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், பித்தகோரஸ் தேற்றத்தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, கி.பி.6-வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார். கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

சதுரங்க விளையாட்டும் இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என இரு பெயரில் அழைக்கப்பட்டது. பல்வேறு சிகிச்சைகளை 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். இப்படி பல்வேறு துறையில் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள், விஞ்ஞானிகளில் 12 சதவீதம் இந்தியர்கள். விண்வெளி மையமான நாசாவில், 36 சதவீதம் இந்தியர்கள். பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் 34 சதவீதம் இந்தியர்கள். கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்மில் 28 சதவீதம் இந்தியர்கள். அதே போல இன்டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 17 சதவீதம் இந்தியர்கள். சிராக்ஸ்’நிறுவனத்தில் 13 சதவீதம் இந்தியர்கள். அமெரிக்காவில் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அரசியல், சாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத்திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை...!

Next Story