சிறப்புக் கட்டுரைகள்

நடனமாடும், அதிநவீன கார் + "||" + Dancing, sophisticated car

நடனமாடும், அதிநவீன கார்

நடனமாடும், அதிநவீன கார்
டெல்லியை சேர்ந்த கமல் கஷ்மீரி, கார் பிரியர். அதனால் வாடகை கார் ஓட்டி, அதன்மூலம் கிடைத்த பணத்தில், டொயோட்டா பார்ச்சூனர் காரை வாங்கினார். அந்த புதிய காரில், வண்ண விளக்குகளை எரியவிட்டு, பெரிய ஸ்பீக்கர்களை மாட்டிவிட்டு சாலைகளில் வலம் வந்து அட்டகாசப்படுத்துகிறார்.
29 லட்சம் மதிப்பிலான அந்த காரில், 8 லட்சம் ரூபாய்க்கு செலவு செய்து, காரை அலங்கரித்திருக்கிறார். அப்படி அந்த காரை எதற்காக அலங்கரித்தார், என்ன செய்கிறார்... போன்ற கேள்வி களுக்கு கமல் பதிலளிக்கிறார்.

கார் வாங்கும் ஆசை பிறந்தது எப்படி?

நான் 7 வருடங்களாக வாடகை கார் ஓட்டினேன். அப்போதிலிருந்தே சொந்த கார் வாங்கி ஓட்ட ஆசைப்பட்டேன். அதற்காக சில காலங்கள் காத்திருந்தேன். 5 வருட காத்திருப்பிற்கு பிறகு, சொந்தமாக டொயோட்டா பார்ச்சூனர் கார் வாங்கினேன். ஆரம்பத்தில் இந்த காரை வைத்து என்ன செய்வது என்று புரியவில்லை. முதல் 1000 கிலோமீட்டர்கள், எந்தவித யோசனையும் இன்றி, ஜாலியாக ஓட்டிக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகுதான், காரை அலங்கரிக்கும் ஆசை வந்தது.

கார் அலங்காரம் எதற்காக?

காஷ்மீர், டெல்லி, பஞ்சாப் போன்ற பகுதிகளில் நடக்கும் திருமணங்களில், குதிரை நடனம் வெகுசிறப்பாக நடக்கும். அந்த குதிரையை வெகுசிறப்பாக அலங் கரித்திருப்பார்கள். இது டிஜிட்டல் யுகம் என்பதால், குதிரைக்கு மாற்றாக என்னுடைய காரை பயன்படுத்த ஆசைப்பட்டேன். அதற்காகவே காரை 8 லட்சம் செலவில் அலங்கரித்தேன். பெரிய ஸ்பீக்கர்கள், வண்ண விளக்குகள், காரை குதிக்க வைக்கும் சஸ்பென்ஷன்கள்... என பல விஷயங்களை மாற்றினேன். அதனால் இன்று திருமண நிகழ்ச்சிகளில் என்னுடைய கார் நடனமாடி வருகிறது.

கார் நடனத்திற்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?

3 மணிநேர வேலைக்கு, ரூ.30 ஆயிரம் வாங்குகிறேன். இதில் பாட்டு பாடுவது, மணமக்கள் அழைப்பில் கார் நடனமாடுவது, வண்ண விளக்குகளை எரியவிட்டு வலம் வருவது என பல விஷயங்கள் உண்டு. ஆனால் எதுவாக இருந்தாலும் சரி, அந்த 3 மணிநேரத்திற்குள் முடித்து கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இன்று நல்ல சம்பாத்தியம் நடக்கிறது. ஒரு மாதத்தில் 20 நாட் களுக்கு கார் நடன மாடிக்கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் என்னை புக் செய்துவிட்டுதான், திருமண நாளையே முடிவு செய்யும் சுவாரசியங்களும் அரங்கேறி உள்ளன.

கார் நடனத்தை மக்கள் ரசிக்கிறார்களா?

நிச்சயமாக ரசிக் கிறார்கள். கிரிக்கெட் வீரர் சேவாக் கார் நடனத்தை ரசித்து, என்னை நேரில் அழைத்து பாராட்டினார். அதுபோல டெல்லியை சுற்றியிருக்கும் பிரபலங்களின் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. சில கல்வி நிறுவனங்களில் நடக்கும் விழாக் களுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கிறார்கள்.