சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச ஏற்றம்


சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச ஏற்றம்
x
தினத்தந்தி 11 Nov 2019 5:02 AM GMT (Updated: 11 Nov 2019 5:02 AM GMT)

சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது.

அதே சமயம் 4 நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிக ஏற்றம் கண்டது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு அதிகபட்ச சரிவைச் சந்தித்தது.

குறியீட்டு எண்கள்
கடந்த வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 158.58 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.55 புள்ளிகள் முன்னேறியது. அந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 4 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.54,875 கோடி சரிவடைந்தது.

அதில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.26,900 கோடி குறைந்து ரூ.6.22 லட்சம் கோடியாக இருந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளின் மதிப்பு ரூ.20,230 கோடி சரிந்து ரூ.4.51 லட்சம் கோடியாக குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு ரூ.7,383 கோடி குறைந்து ரூ.9.16 லட்சம் கோடியாக இருந்தது. ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.1,013 கோடி சரிந்து ரூ.3.20 லட்சம் கோடியாக குறைந்தது.

கடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது. அதில் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.17,760 கோடி உயர்ந்து ரூ.3.16 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.17,594 கோடி அதிகரித்து ரூ.3.85 லட்சம் கோடியாக உயர்ந்தது. எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.7,854 கோடி அதிகரித்து ரூ.6.86 லட்சம் கோடியை எட்டியது.

இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.5,747 கோடி உயர்ந்து ரூ.3.04 லட்சம் கோடியாக இருந்தது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.3,820 கோடி அதிகரித்து ரூ.3.05 லட்சம் கோடியாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.2,097 கோடி உயர்ந்து ரூ.2.82 லட்சம் கோடியாக அதிகரித்தது.

Next Story