சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: பி.எஸ்.6 புகை விதிக்கேற்ப யமஹா எப்.இஸட்., எப்.இஸட்.எஸ். மோட்டார் சைக்கிள்கள் + "||" + Vanavil : Yamaha F.Z., F.Z.S. Motorcycles According to BS6 Smoking Rules

வானவில்: பி.எஸ்.6 புகை விதிக்கேற்ப யமஹா எப்.இஸட்., எப்.இஸட்.எஸ். மோட்டார் சைக்கிள்கள்

வானவில்: பி.எஸ்.6 புகை விதிக்கேற்ப யமஹா எப்.இஸட்., எப்.இஸட்.எஸ். மோட்டார் சைக்கிள்கள்
யமஹா நிறுவனம் தனது உயர்ரக மோட்டார் சைக்கிள்களையும் மேம்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள பாரத்6 புகை விதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
யமஹா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான யமஹா எப்.இஸட்., யமஹா எப்.இஸட்.எஸ். ஆகிய மாடல்கள் தற்போது பி.எஸ்.6 தரத்துக்கேற்ப தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. எப்.இஸட். மாடலின் ஆரம்ப விற்பனையக விலை சுமார் ரூ.99,200 ஆகும். மற்றொரு மாடலான எப்.இஸட்.எஸ். மாடலின் விற்பனையக விலையை சுமார் ரூ.1,01,200 ஆக நிர்ணயித்துள்ளது. முன்பு உள்ள மாடலை (பி.எஸ்.4) விட இவற்றின் விலை ரூ.2,500 அதிகமாகும். புதிய வண்ணங்களான மெட்டாலிக் ரெட் மற்றும் டார்க் நைட்டின் விலை ரூ.1,500 அதிகமாகும்.

எப்.இஸட். மற்றும் எப்.இஸட்.எஸ். மாடல் என்ஜின் 149 சி.சி. திறன் கொண்டது. ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாகவும், 12.4 ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியதாகவும் இது வந்துள்ளது.

இவை இரண்டும் 5,500 ஆர்.பி.எம். வேகத்தில் 13.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகும். மற்றபடி இவற்றின் தோற்றப் பொலிவு, வடிவமைப்பில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. வழக்கம்போல முன்புறம் மற்றும் பின்புறத்துக்கு டிஸ்பிரேக், ஏ.பி.எஸ்., இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியுடன் இவை வந்துள்ளன.