அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 25 Nov 2019 5:03 AM GMT (Updated: 25 Nov 2019 5:03 AM GMT)

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

அணுசக்தி ஆராய்ச்சி மையம்
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் செக்யூரிட்டி கார்டு பணிக்கு மட்டும் 73 இடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கும், பட்டதாரிகள் உதவி செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6-ந் தேதியாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை
www.barc.gov.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

ஆயுர்வேத அறிவியல் மையம்
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (CCRAS) அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு தெரிந்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 19-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை
www.ccras.nic.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

எஸ்.ஜே.வி.என்.
மத்திய அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தும் மின்உற்பத்தி திட்ட நிறுவனம் எஸ்.ஜே.வி.என். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தல் பயிற்சிப் பணியிடங்களுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை
www.sjvn.nic.in
என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு நவம்பர் 29-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

பழங்குடியினர் நலத்துறை
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்று பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு கழக நிறுவனம் (TRIFED) புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பொது மேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர் மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என அனைத்துவித படிப்புகளை படித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30--ந் தேதியாகும். இது பற்றிய கூடுதல் விவரங்களை
www.trifed.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தாமிர நிறுவனம்
மத்திய அரசின் செம்பு தாது (தாமிரம்) நிறுவனம் எச்.சி.எல். என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அட்டண்ட் கம் ஜூனியர் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், மற்றும் பி.எஸ்சி. பாடங்களில் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு டிசம்பர் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மற்றொரு அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் பட்டதாரிகளை பயிற்சிப் பணியிடங்களுக்கு நியமிக்கிறார்கள். மொத்தம் 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு டிசம்பர் 1-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய கூடுதல் விவரங்களை www.hindustancopper.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story