விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்- செடன் டிசையர் முதலிடம்


விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்- செடன் டிசையர் முதலிடம்
x
தினத்தந்தி 26 Nov 2019 6:33 AM GMT (Updated: 26 Nov 2019 6:33 AM GMT)

அக்டோபர் மாத விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் செடன் டிசையர் முதலிடத்தில் நீடிக்கிறது.

சியாம் புள்ளிவிவரங்கள்
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

மாருதி சுசுகி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 19,569 செடன் டிசையர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 17,404-ஆக இருந்தது. டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் நீடிக்கிறது.

மாருதி சுவிப்ட் விற்பனை 12 சதவீதம் அதிகரித்து (17,215-ல் இருந்து) 19,401 கார்களாக உயர்ந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மாருதி ஆல்டோ கார் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 17,903- ஆக குறைந்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 22,180 கார்களாக இருந்தது.

மாருதி பேலினோ கார் விற்பனை 16,237-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18,657-ஆக இருந்தது. இது நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் 8-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தக் கார் விற்பனை (13,290-ல் இருந்து) 14,683- ஆக உயர்ந்துள்ளது. மாருதியின் வேகன் ஆர் கார் விற்பனை 14,359-ஆக இருக்கிறது. இந்த கார் ஆறாவது இடத்திற்கு சென்று இருக்கிறது.

கியா செல்டாஸ்
கியா செல்டாஸ் கார் விற்பனை 12,854-ஆக இருக்கிறது. இது டாப் 10 பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறது. மாருதியின் எஸ் பிரெஸ்சோ விற்பனை 10,634-ஆக உள்ளது. இந்த கார் 8-வது இடத்திற்கு வந்துள்ளது. மாருதியின் பிரெஸ்ஸா கார் விற்பனை 35 சதவீதம் சரிவடைந்து 10,227- ஆக உள்ளது. இது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. மாருதியின் ஈகோ கார் விற்பனை (6,714-ல் இருந்து) 10,011-ஆக இருக்கிறது. டாப் 10 பட்டியலில் இந்த கார் 10 இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

Next Story