சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360 + "||" + Vanavil : Hp Chromebook X360

வானவில்: ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360

வானவில்: ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360
கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹியூலெட் பக்கார்டு நிறுவனம் தற்போது ‘குரோம்புக் எக்ஸ் 360’ என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு வேரியன்ட்களில்  இது வந்துள்ளது. அதாவது 12 அங்குல திரை மற்றும் 14 அங்குல திரையைக் கொண்டதாக இவை வந்துள்ளன. இதன் திரை 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் வகையிலானது. இது மெல்லியதாக, எடை குறைவானதாக இருப்பதால் இதைக் கையாள்வது எளிது.

இது கூகுள் அசிஸ்ட் முறையிலான குரல்வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படக் கூடியது. இதில் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி மற்றும் 100 ஜி.பி. வசதி கொண்டது. இதில் 12 அங்குல மாடல் விலை சுமார் ரூ.29,990 ஆகும். 14 அங்குல மாடல் விலை சுமார் ரூ.34,990. இத்துடன் யு.எஸ்.ஐ. ஸ்டைலஸ் பேனாவை வாங்கிக்கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.3,999.