சிறப்புக் கட்டுரைகள்

டிசம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 8.64% குறைந்தது + "||" + Palm oil imports fell 8.64% in December

டிசம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 8.64% குறைந்தது

டிசம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 8.64% குறைந்தது
டிசம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 8.64 சதவீதம் குறைந்து இருக்கிறது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

94 லட்சம் டன்

நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் சமையல் எண்ணெய் உற்பத்தியும் குறைவாக உள்ளது. எனவே தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமையல் எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் 7.41 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 8.12 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 8.64 சதவீதம் குறைந்துள்ளது. இதில் கச்சா பாமாயில் இறக்குமதி (6.70 லட்சம் டன்னில் இருந்து) 6.32 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது. சுத்திகரித்த பாமாயில் இறக்குமதி (1.30 லட்சம் டன்னில் இருந்து) 95 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.

பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 2018-19 பருவத்தில் (நவம்பர்-அக்டோபர்) 94 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது இது 8 சதவீதம் அதிகமாகும். அந்தப் பருவத்தில் சுத்திகரித்த பாமாயில் இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்து 27 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டில் தற்போது பாமாயில் உற்பத்தி 3 லட்சம் டன்னாக இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இது 6 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்குக் காரணமாகும்.

இறக்குமதி வரி

மத்திய அரசு இம்மாதம் 1-ந் தேதி முதல் இறக்குமதியாகும் சுத்திகரித்த பாமாயில் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் கச்சா பாமாயில் இறக்குமதி வரி 45 சதவீதத்தில் இருந்து 37.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு வகை பாமாயில் இறக்குமதியில் வரி வித்தியாசம் 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.