வானவில் : டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ்


வானவில் : டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:07 AM GMT (Updated: 22 Jan 2020 11:07 AM GMT)

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ இந்திய சந்தையில் ‘ஸ்பார்க் கோ பிளஸ்’ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

6.5 அங்குலம் தொடு திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,299 ஆகும்.  விரல் ரேகை உணர் சென்சார் இதன் பின்பகுதியில் உள்ளது. இதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ 22 பிராசஸர் உள்ளது. 

இதில் 2 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை 128 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி உள்ளது.

இதன் முன்புற மற்றும் பின்புறங்களில் உள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. டியூயல் எல்.இ.டி. பிளாஸ் வசதி உள்ளது. வை-பை, புளூடூத், ஜி.பி.எஸ். கொண்டது. 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. நீலம், பர்பிள் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. 

Next Story