வானவில் : லாவா ஏ5 ஸ்பெஷல் எடிஷன்


வானவில் : லாவா ஏ5 ஸ்பெஷல் எடிஷன்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:36 AM GMT (Updated: 22 Jan 2020 11:36 AM GMT)

இந்தியாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா ஏ5 என்ற பெயரிலான புதிய மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,449 ஆகும்.

செல்போனின் பின்பகுதியில் மூவர்ணம் உள்ளது. இந்த வண்ணத்துக்கு சூப்பர் அல்ட்ரா தொழில்நுட்பம் என்று பெயர். இதில் 2.4 அங்குல கியூ.வி.ஜி.ஏ. டிஸ்பிளே நுட்பம் உள்ளது. இதில் இரட்டை சிம் கார்டு போட்டு உபயோகிக்கலாம்.

இதில் 1,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் இது 3 நாட்கள் வரை நீடிக்கும். இதன் உள்ளட்டு நினைவக வசதி 32 ஜி.பி. ஆகும். இதில் 22 இந்திய மொழிகளில் வரும் குறுந்தகவல்களை படிக்க முடியும். இதில் உள்ள கேமராவில் புகைப்படம் எடுக்க முடிவதோடு வீடியோ காட்சிகளையும் பதிவு செய்யலாம். அத்துடன் டார்ச் லைட் வசதி, எப்.எம். நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கவும் முடியும்.


Next Story