சிறப்புக் கட்டுரைகள்

டாட்டா மோட்டார்ஸ் லாபம் ரூ.1,738 கோடி + "||" + Tata Motors Profit of Rs 1,738 crore

டாட்டா மோட்டார்ஸ் லாபம் ரூ.1,738 கோடி

டாட்டா மோட்டார்ஸ் லாபம் ரூ.1,738 கோடி
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.1,738 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.1,738 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இதன் இழப்பு ரூ.26,960 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 6.8 சதவீதம் குறைந்து ரூ.71,676 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.76,915 கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.1,039 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் லாபம் ரூ.617 கோடியாக இருந்தது. தனிப்பட்ட வருவாய் ரூ.10,842 கோடியாக இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.191.05-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.192.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.184.35-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.186.20-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.98 சதவீத சரிவாகும்.