சிறப்புக் கட்டுரைகள்

அழைப்பு உங்களுக்குத்தான் + "||" + The call is for you

அழைப்பு உங்களுக்குத்தான்

அழைப்பு உங்களுக்குத்தான்
ஒவ்வொரு பணிக்குமான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். எழுத்துத் தேர்வு, நேர் காணல், திறமைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுமுறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மோயில்
மாங்கனீஸ் தாது வள நிறுவனமான மோயில் மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் 11 சுரங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது இந்த நிறுவனத்தில் முதுநிலை மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 22 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது, 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள், பி.இ. பட்டதாரிகள் என பலருக்கும் பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்குமான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். எழுத்துத் தேர்வு, நேர் காணல், திறமைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுமுறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 18-ந் தேதியாகும். விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி www.moil.nic.in என்பதாகும்.

வங்கி :
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில், புரபெஸனரி மேலாளர் (சி.ஏ.) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஏ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

சி.ஏ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.southindianbank.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 23-ந் தேதியாகும்.

ஐ.ஓ.சி.எல்.
இந்திய ஆயில் கழகத்தின்,தெற்கு மண்டல மார்க்கெட்டிங் பிரிவில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், www.iocl.com/PeopleCareers/Careers.aspx என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

எக்சிம் வங்கி
ஏற்றுமதி இறக்குமதி வணிக வங்கியான எக்சிம் வங்கியில் முதுநிலை மேலாளர், மேலாளர், துணை மேலாளர், அட்மின் ஆபீசர், ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, சட்ட பட்டப்படிப்பு, முதுநிலை இந்தி, ஆங்கிலம் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை www.eximbankindia.in என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 22-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு உத்தேசமாக மார்ச் 15-ந் தேதியும், நேர்காணல் ஏப்ரல் மாதமும் நடைபெற உள்ளது.

கூட்டுறவு வங்கி
திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்கள் கூட்டுறவு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

1-1-2019 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்து, 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tvldrb.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான சான்றுகள் இணைக்கபட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 2-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது.

என்.ஐ.டி. கோழிக்கோடு
தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் கோழிக்கோடு கிளையில் எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 3 வருட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், பிளஸ்-2 படிப்புடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், 10-ம் வகுப்பு படிப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிக்குத் தகுதியானவர்கள். நேர்காணல் அடிப் படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 1-2-2020-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். பிப்ரவரி 21-ந் தேதி கோழிக்கோட்டில் நேர் காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.nitc.ac.in என்ற இணையதளத்தில் பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

1. அழைப்பு உங்களுக்குத்தான்
அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
2. அழைப்பு உங்களுக்குத்தான்
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
3. அழைப்பு உங்களுக்குத்தான்
கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 124 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.