வானவில் : சென்ஹைசர் பி.எக்ஸ் சி 550 மி.மி.


வானவில் : சென்ஹைசர் பி.எக்ஸ் சி 550 மி.மி.
x
தினத்தந்தி 19 Feb 2020 11:07 AM GMT (Updated: 19 Feb 2020 11:07 AM GMT)

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சென்ஹைஸர் நிறுவனம் புதிதாக பி.எக்ஸ்.சி 550. மி.மி. என்ற பெயரிலான வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் 5.0 இணைப்பு வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி ஆயுள், காற்று இரைச்சல் தவிர்ப்பு, ஏ.என்.சி. செட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. பிரீமியம் மாடலாக வந்துள்ள இந்த ஹெட்போனின் விலை சுமார் ரூ.29,990 ஆகும்.

இரண்டாம் தலைமுறை மாடலாக வந்துள்ள இந்த ஹெட்போனில் உள்ளடான மாறுதல்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிப்புற வடிவமைப்பில் பெரும் மாறுதல்கள் செய்யப்படவில்லை. இதிலிருந்து வெளியாகும் சவுண்ட் தரமாக, துல்லியமாக இருக்கும். இதனுள் மூன்று மைக்ரோபோன் உள்ளது.

வெளிப்புற இரைச்சலை தவிர்க்கும் அதேசமயம் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை மேற்கொள்ள இது உதவும். ஆன்டிவின்ட் அதாவது காற்று இரைச்சல் முற்றிலுமாக தவிர்க்கும் நுட்பம் இதில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடு நுட்பம் மூலம் செயல்படுத்தும் வகையில் இதன் பொத்தான்கள் உள்ளன. இசையின் அளவை அதிகரித்துக் கொள்வது, குறைப்பது, நிறுத்துவது, வேறு நிகழ்ச்சிக்கு மாற்றுவது உள்ளிட்டவற்றை லேசாக தொடுவதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். சென்ஹைஸர் ஸ்மார்ட் செயலி மூலம் இதை செயல்படுத்தலாம். நாய்ஸ் கேன்சலிங் அளவை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

Next Story