சென்செக்ஸ் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி பங்கு அதிகபட்ச ஏற்றம் பார்தி ஏர்டெல் பங்கு விலை அதிக சரிவு


சென்செக்ஸ் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி பங்கு அதிகபட்ச ஏற்றம் பார்தி ஏர்டெல் பங்கு விலை அதிக சரிவு
x
தினத்தந்தி 19 Feb 2020 11:20 AM GMT (Updated: 19 Feb 2020 11:20 AM GMT)

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு ரூ.315.90-க்கு கைமாறியது.

மும்பை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு அதிகபட்சமாக ஏற்றம் கண்டது. அதே சமயம் பார்தி ஏர்டெல் பங்கு விலை அதிக சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு ரூ.315.90-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.319-க்கும், குறைந்தபட்சமாக ரூ.309.50-க்கும் சென்றது. இறுதியில் ரூ.317.60-ல் நிலைகொண்டது. திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.08 சதவீத உயர்வாகும்.

நேற்று பார்தி ஏர்டெல் பங்கு தொடக்கத்தில் ரூ.564-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.568.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ.537.65-க்கும் சென்றது. இறுதியில் ரூ.547.75-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 3.05 சதவீதம் சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story