வானவில் : கே.டி.எம். வயர்லெஸ் ஹெட்போன்


வானவில் : கே.டி.எம். வயர்லெஸ் ஹெட்போன்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:39 AM GMT (Updated: 19 Feb 2020 11:39 AM GMT)

ஆடியோ பொருட்களைத் தயாரிக்கும் கே.டி.எம். நிறுவனம் வயர்லெஸ் புளூடூத் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இது மிகவும் ஏற்றதாகும். இதில் உள்ள பேட்டரி நீடித்து உழைக்கும். இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். கே.டி.எம் 851. ஹெச் என்ற பெயரில் வந்துள்ள இந்த ஹெட்போனில் மைக் வசதியும் உள்ளது. இது 4.2 புளூடூத் இணைப்பைப் பெற்றுள்ளதால் தடையற்ற வகையில் இசையை கேட்டு மகிழ முடியும்.

இசைப் பிரியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலம் பதில் அளிக்க முடியும். விளையாட்டு பிரியர்கள் மற்றும் அடிக்கடி வீடியோ உரையாடல் நிகழ்த்துவோருக்கு மிகவும் ஏற்றதாகும். கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ளது. பண்பலை வானொலியில் பாடல்களையும் கேட்கலாம். இதன் விலை சுமார் ரூ.870 ஆகும்.

Next Story