பிரசவத்திற்கு உதவும் விர்ச்சுவல் ரியாலிட்டி


பிரசவத்திற்கு உதவும் விர்ச்சுவல் ரியாலிட்டி
x
தினத்தந்தி 24 Feb 2020 10:28 AM GMT (Updated: 24 Feb 2020 10:28 AM GMT)

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் என்பது வீடியோ கேம் விளையாட்டுகளை மேம்படுத்தும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது பிரசவம் உள்பட பல்வேறு இடங்களில் பயன்படும் என்று தெரிய வந்துள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனத்தை கர்ப்பிணி பெண்களின் கண்களில் பொருத்திக் கொண்டு, மனதை லேசாக்கும் காட்சிகள், தகவல்களை ஒளிபரப்பி மகப்பேறு சிகிச்சைகள் நடத்தப்பட்டது. சுமார் 40 பெண்களிடம் இந்த பரிசோதனை ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் இந்த சாதனம் பயன்படுத்தாத கர்ப்பிணி களைவிட வலியை அதிகம் உணராமல் குழந்தை பெற்றெடுத்ததாக கூறி உள்ளனர். இதையடுத்து விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனம் சிறந்த வலிநிவாரண கருவியாகவும் பயன்படுத்த உகந்தது என்று கூறி உள்ளனர், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.


Next Story