சிறப்புக் கட்டுரைகள்

மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள் + "||" + A large number of training centers in central government institutions

மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள்
ரெயில் என்ஜின் நிறுவனம், உருக்கு நிறுவனம், ராணுவ நிறுவனம் போன்றவற்றில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்...
ரெயில் என்ஜின் நிறுவனம்

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படுகிறது ‘டீசல் லோகோ மாடனிசேசன் ஒர்க்ஸ்’. ரெயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனமான இது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செயல்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு பணி வாய்ப்பு என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு படித்தவர்கள் வெல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெல்டர் பணிக்கு 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஏப்ரல் 20-ந்தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் மே அல்லது ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.

இது பற்றிய விவரத்தை https://dmw.indianrailways.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

ராணுவ நிறுவனம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் கீழ், செயல்படும் துணை அமைப்பு அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லேபரேட்டரி. ஐதராபாத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள், டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோ ஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பட்டதாரி பயிற்சி பணிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள், அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு மார்ச் 7-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை www.drdo.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

பெல்

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் ஜகதீஸ்பூர் கிளையில், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 51 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், வெல்டர், மெக்கானிக், உள்பட பல பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.bhel.com/ இணையதளத்தில் பார்த்துவிட்டு மார்ச் 20-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

உருக்கு நிறுவனம்

இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) எனப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பர்ன்பூர் இஸ்கோ ஸ்டீல் பிளான்ட் கிளையில் தற்போது டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...

28-2-2020-ந் தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணைய பக்கத்தின் வழியாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, பின்னர் இஸ்கோ ஸ்டீல் பிளான்ட் நிறுவன https://sail.co.in/iisco-steel-plant/about-iisco-steel-plant இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 17-ந் தேதியாகும்.