சிறப்புக் கட்டுரைகள்

சந்தை நிலவரங்கள் சரியில்லாததால்ஆன்டனி வேஸ்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வாபஸ் + "||" + Anthony Waste Company New Stock Issue Revoked

சந்தை நிலவரங்கள் சரியில்லாததால்ஆன்டனி வேஸ்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வாபஸ்

சந்தை நிலவரங்கள் சரியில்லாததால்ஆன்டனி வேஸ்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வாபஸ்
சந்தை நிலவரங்கள் சரியில்லாததால் ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் புதிய பங்கு வெளியீடு வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
மும்பை

சந்தை நிலவரங்கள் சரியில்லாததால் ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் புதிய பங்கு வெளியீடு வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை

ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை நிர்வாக சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இந்த துறையில் எந்த நிறுவனமும் இதுவரை பங்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது.

இந்த வெளியீடு இம்மாதம் 4-ந் தேதி தொடங்கியது. முதலில் திட்டமிட்டபடி கடந்த 6-ந் தேதியே (வெள்ளிக் கிழமை) வெளியீடு நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் இறுதி நாளில் முதலீட்டாளர்கள் மத்தியில் 50 சதவீத பங்குகளுக்கு மட்டுமே தேவைப்பாடு இருந்தது. அந்த நிலையில், பங்கு வெளியீட்டுக் காலம் 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.294-300-ஆக மறுநிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் சந்தை நிலவரங்கள் சாதகமாக இல்லாத நிலையில் ஆன்டனி வேஸ்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) வாபஸ் பெறப்பட்டுள்ளது. பங்கு வெளியீடு மூலம் ரூ.203 கோடி வரை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. வெளியீட்டை ஈக்விரஸ் கேப்பிட்டல் நிறுவனம் நிர்வகித்தது.

ரொசாரி பயோடெக்

மோசமான சந்தை நிலவரங்கள் காரணமாக புதிய பங்கு வெளியிட தயாராகிய ரொசாரி பயோடெக் நிறுவனத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

மும்பையைச் சேர்ந்த ரொசாரி பயோடெக் நிறுவனம் சிறப்பு ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியா, வியட்நாம், வங்காளதேசம், மொரீஷியஸ் உள்ளிட்ட 17 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.பி.எல்., ஐ.எப்.பீ. இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பானாசோனிக் இந்தியா, பீ.எஸ்.எச். ஹவுஸ்ஹோல்டு அப்ளையன்சஸ் மானுபாக்சரிங், மில்லெனியம் பேப்பர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு