சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : அம்பரேன் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர் + "||" + Vanavil : Amparen Portable Bluetooth Speaker

வானவில் : அம்பரேன் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்

வானவில் : அம்பரேன் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் அம்பரேன் நிறுவனம் வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கரை (பி.டி 83) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999.
கருப்பு, நீல நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. உருளை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர், மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டது. வெளி இடங்களில் நிலவும் தூசு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாதது.

இது வயர்லெஸ் அடிப்படையில் செயல்படக்கூடியது. இனிய இசையை வழங்க 10 வாட் ஸ்பீக்கர் உள்ள இதில் 2,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்ந்து 7 மணி நேரம் செயல்பட வழிவகுக்கிறது. இதில் மைக்ரோபோன் உள்ளதால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலமே பதில் அளிக்கலாம். 

இதன் வயர்லெஸ் செயல் திறன் 10 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் திறன் பெற்றது. இதில் ஏ.யு.எக்ஸ். இணைப்பு, எஸ்.டி. கார்டு இணைப்பு மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : கே.டி.எம். ‘எஸ்.பி 115’ புளூடூத் ஸ்பீக்கர்
கே .டி.எம். நிறுவனம் கே.டி.எம். ‘எஸ்.பி 115’ என்ற பெயரில் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. மிகச் சிறப்பான இசையை வெளிப்படுத்தும் வகையிலும், நீடித்து உழைக்கும் வகையிலும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர்
மின்னணு கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிங்கர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக புளூடூத் ஸ்பீக்கர்களை சூப்பர் லிட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்
ஜியோமி நிறுவனம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீக்கரை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாகத் தெரியும்.