சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பயோனீர் நிறுவனத்தின் புதிய ரக ஸ்பீக்கர் + "||" + Vanavil :Pioneer's new type of speaker

வானவில் : பயோனீர் நிறுவனத்தின் புதிய ரக ஸ்பீக்கர்

வானவில் : பயோனீர் நிறுவனத்தின் புதிய ரக ஸ்பீக்கர்
ஜப்பானின் பயோனீர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான பயோனீர் நிறுவனம் சப் ஊபர் அடங்கிய புதிய ரக ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இது ஆக்டிவ் டியூப் டி.எஸ்.டபிள்யூ.எக்ஸ் 3000 டி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
கார் ஆடியோவில் உள்ள சிறப்பான இசையை வீட்டினுள்ளும் கேட்க உதவுகிறது இந்த ஸ்பீக்கர். நீடித்து உழைக்கும் வகையிலும், தரமான சவுண்ட், கண்கவர் டிசைன், போதிய காற்று உள்சென்று வரும் வகையிலான வடிவமைப்பு இதன் சிறப்பம்சமாகும். உறுதியாக இருக்கும் வகையில் இதன் உதிரி பாகங்கள் வலிமையானதாக வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால் இதன் எடை 9 கிலோவாக உள்ளது.

இதில் உள்ள வலைப்பகுதி உறுதியான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உறுதியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அது எந்த வகையிலும் இதன் அழகிய தோற்றத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமையவில்லை. காற்று உள்சென்று வெளியேறும் வகையிலான வடிவமைப்பு மிகச் சிறந்த இசை ஒரிஜினல் தன்மை மாறாமல் வெளிப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள சப் ஊபர் இசை அளவை கூட்டவும், குறைக்கவும் உதவும். இசைப் பிரியர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.