சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : மிஜியாவின் ஸ்மார்ட் வீடியோ டோர் பெல் + "||" + Vanavil :Mijia's Smart Video Door Bell

வானவில் : மிஜியாவின் ஸ்மார்ட் வீடியோ டோர் பெல்

வானவில் : மிஜியாவின் ஸ்மார்ட் வீடியோ டோர் பெல்
ஜியோமி நிறுவனத்தின் அங்கமமான மிஜியா தற்போது ஸ்மார்ட் வீடியோ டோர் பெல்லை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,000.
கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டோர்பெல் பார்ப்பதற்கே மிக அழகிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான கேமரா உள்ளது.

இது வீட்டின் முன்பகுதி முழுவதையும் படம் பிடித்துக் கொண்டிருக்கும். உங்கள் வீட்டின் வாசலில் எவரேனும் நின்று கொண்டிருந்தால் உடனே அவரை படம் பிடித்து நீங்கள் இணைத்துள்ள ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும். இந்த அழைப்பு மணி (டோர்பெல்) சாதனத்தில் மணியை அடிக்க வேண்டிய பொத்தானும் உள்ளது.

வீட்டில் நீங்கள் இல்லாமலிருந்தால், மொபைல் போன் மூலமாகவே வாயிலில் காத்திருப்பவருக்கு பதில் கூற முடியும். விரைவிலேயே இந்தியாவிலும் இந்த டோர்பெல்லை அறிமுகப்படுத்த ஜியோமி திட்டமிட்டு உள்ளது.