சிறப்புக் கட்டுரைகள்

மத்திய அரசில் உதவி என்ஜினீயர் வேலை + "||" + Job as Assistant Engineer in Central Government

மத்திய அரசில் உதவி என்ஜினீயர் வேலை

மத்திய அரசில் உதவி என்ஜினீயர் வேலை
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் முக்கிய அதிகாரி பணியிடங்களை யூ.பி.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது உதவி என்ஜினீயர், உதவி கால்நடை அதிகாரி, உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 85 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிகபட்சமாக பாதுகாப்புத் துறையின் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் பிரிவில் உதவி என்ஜினீயர் பணிக்கு 42 இடங்களும், தொழிலாளர் துறையின் மாநில காப்பீட்டு கழகத்தில் உதவி இயக்குனர் பணிக்கு 13 இடங்களும் இதில் உள்ளன.

முதுநிலை சமூக நலப்பணி, தொழிலாளர் நலப்பணி, சோசியாலஜி, பொருளாதாரவியல், புள்ளியியல் படிப்புகளை படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பாடங்கள் படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு கல்வித்தகுதி வேறுபடுகிறது. அது பற்றிய விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 2-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.