தமிழக மின்சார வாரியத்தில் 2900 பணியிடங்கள்


தமிழக மின்சார வாரியத்தில் 2900 பணியிடங்கள்
x
தினத்தந்தி 23 March 2020 10:40 AM GMT (Updated: 23 March 2020 10:40 AM GMT)

தமிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் மின்பகிர்மான கழகத்தில் 2900 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 900 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்கலாம்.

கல்வித்தகுதி

எலக்ட்ரீசியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் என்.டி.ஏ., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்

முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆகியோர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் நடைபெறும் நாள் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு நாளை (மார்ச் 24) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 23-ந் தேதியாகும். தேர்வுக் கட்டணம் வங்கியில் செலுத்த ஏப்ரல் 28-ந் தேதி கடைசிநாளாகும்.

விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tangedco.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story