தேசிய செய்திகள்

30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு சமம்; இறைச்சிக்கு பதில் பலாப்பழத்தை விரும்பும் வெளிநாட்டவர்கள் + "||" + 'Unwanted' jackfruit witnesses surge in demand as meat substitute

30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு சமம்; இறைச்சிக்கு பதில் பலாப்பழத்தை விரும்பும் வெளிநாட்டவர்கள்

30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு சமம்; இறைச்சிக்கு பதில்  பலாப்பழத்தை விரும்பும் வெளிநாட்டவர்கள்
உலகளவில் இறைச்சி சம்பந்தமான உணவுப் பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து அதற்கு மாற்றாக பலாப்பழத்தின் மீது வெளிநாட்டவரின் பார்வை விழுந்துள்ளது.
புதுடெல்லி
 
முக்கனிகளில் ஒன்றாகிய பலாப்பழம் மிகச்சிறந்த  உலகளாவிய இந்திய பழமாக மாறியுள்ளது, இப்போது இது  புதிய "சூப்பர்ஃபுட்" என்று அழைக்கப்படுகிறது. தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்டது.

உலகின் மிகப்பெரிய பலாப்பழம் உற்பத்தியாளர் இந்தியா. நாட்டில் வாழும் எவருக்கும் இதன் அருமை தெரியவில்லை வெளியில் பார்ப்பதற்கு கூர்மையான சிறு முட்களுடன் பச்சை நிறத்தில் இருந்தாலும் உள்ளே இனிமையான வாசனையுடன், சுவையான பழம் உள்ளது. இந்தியாவின் தென் கடற்கரையில் ஒரு கொல்லைப்புற மரங்களில் இதன் விளைச்சல் அதிகம்.

சூப்பர் புட்

பல நூற்றாண்டுகளாக தெற்காசியாவின் உணவின் ஒரு பகுதியாக, பலாப்பழம் அதிகமாக  இருந்தது, ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் வீணாகி வந்தது.
ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பலாப்பழம் உற்பத்தியாளரான இந்தியா, அதன் ஒரு "சூப்பர் புட்டான பலாப்பழம் இறைச்சிக்கு மாற்றாக பிரபலமடைந்து வருகிறது - சான் பிரான்சிஸ்கோவிலிருந்து லண்டன் மற்றும் டெல்லி வரை சமையல்காரர்களால் பழுக்காத போது அதன் பன்றி இறைச்சி போன்ற சுவைக்காக இது விரும்பப்படுகிறது.

பலாப்பழம் இறைச்சிக்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. பழத்தின் அமைப்பு அதன் மிகப்பெரிய விற்பனையாக மாறியுள்ளது.

இறைச்சிக்குப் பதில்

உலகில் சைவ உணவுப்பிரியர்கள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.பழுக்காத போது, பலாப்பழத்தில் பன்றி இறைச்சியில் இருப்பது  போன்ற நார் சத்து உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு, இது மெமரி லேனில் சுவை தருகிறது. உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் அதைப் பயன்படுத்துகின்றன. 

சராசரியாக ஐந்து கிலோகிராம் (11 பவுண்டுகள்) எடையுள்ள இந்த பழம், பழுத்த போது மெழுகு மஞ்சள் சதை கொண்டிருக்கிறது.  பழத்தை வெட்டி உள்ளிருக்கும் சுளையை அப்படியே  சாப்பிடுகிறார்கள் கேக்குகள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

பழுக்காத போது, இது கறிகளில் சேர்க்கப்படுகிறது அல்லது வறுக்கப்படுகிறது.  துண்டு துண்டாக வெட்டப்பட்டு வதக்கப்படுகிறது. மேற்கில், துண்டாக்கப்பட்ட பலாப்பழம் பன்றி இறைச்சிக்கு ஒரு பிரபலமான மாற்றாக மாறியுள்ளது, மேலும் இது பீட்சா டாப்பிங்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பலாப்பழ கட்லெட்

சர்வதேச உணவக சங்கிலி ரூஹ்கவின் இணை உரிமையாளர் அனு பாம்ப்ரி கூறியதாவது:-

மக்கள் இதை விரும்புகிறார்கள். எங்களிடம் பலாப்பழம் பந்துகளாக இருந்தபோதும், மக்கள் அந்த அமைப்பின் காரணமாக அதனை நேசித்தார்கள், நீங்கள் அதை ருசிக்க முடியும்.

எங்கள் பலாப்பழம் டகோஸ் ஒவ்வொரு இடத்திலும் வெற்றி பெறுகிறது. இங்கே பாவ்லோ ஆல்டோவில், பலாப்பழ கட்லெட் ஒரு வெற்றிகரமான மேமஸ் உணவாக உள்ளது - ஒவ்வொரு ஓட்டல் பட்டலியலிலும் அது இடம் பெற்று 
உள்ளது.  அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.ஆம் இது எனது தனிப்பட்ட பிடித்த  உணவுகளில் ஒன்றாகும் என கூறினார்.

30 கிராம் பழம்= 3 ஆப்பிள்

பலாப்பழ மாவு தயாரிக்கும் பலாப்பழம் 365 நிறுவனத்தின் நிறுவனர் ஜேம்ஸ் ஜோசப் கூறியதாவது:-

30 கிராம் பலாப்பழ மாவில் ஒரு கிராம் பெக்டின் உள்ளது. அது மூன்று ஆப்பிள்களுக்கு சமம். இறைச்சியை விரும்பாத பலர் பலாப்பழத்தை அதிகம் விரும்புகின்றனர்.

பலாப்பழமாவு கோதுமை மற்றும் அரிசி மாவுக்கு மாற்றாக பயன்படுத்தப்படலாம் அல்லது பர்கர் முதல் இட்லி போன்ற உள்ளூர் கிளாசிக் வரை எதையும் தயாரிக்கலாம்.

நாங்கள் ஒரு ஊட்டச்சத்து பகுப்பாய்வு செய்தபோது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பும் ஒரு சராசரி நபருக்கு அரிசி மற்றும் ரொட்டி ஆகியவற்றை விட பலாப்பழம் சிறந்தது என்று நாங்கள் கண்டோம்.

கொரோனா வைரஸ் மற்றொரு பயம் காரணமாக உள்ளது. ஜூனோடிக் வைரஸ் இறைச்சி குறித்த பயத்தைத் தூண்டியது. கோழி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுவதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அவர்களில்  நிறைய பேர் பலாப்பழத்திற்கு மாறி உள்ளனர் என கூறினார்.

பலாப்பழ தோட்டம்

கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் பலாப்பழ தோட்டம் வைத்திருக்கும் வர்கீஸ் தரகன் கூறும் போது  வெளிநாட்டிலிருந்து நிறைய ஆர்டர்கள் வருகின்றன. சர்வதேச மட்டத்தில், பலாப்பழம் மீதான ஆர்வம் பன்மடங்கு வளர்ந்துள்ளது.

நான் என் ரப்பர் மரங்களை வெட்டி பலாமரம் வளர்த்த போது எல்லோரும் எனக்கு பைத்தியம் பிடித்ததாக நினைத்தார்கள். ஆனால் அதே மக்கள் இப்போது வந்து என் வெற்றியின் ரகசியத்தை  கேட்கிறார்கள்," 

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும், பலாப்பழத்திற்கான தேவை இப்போது ஒவ்வொரு நாளும் 100 மெட்ரிக் டன் ஆகும், இது உச்ச பருவத்தில் ஆண்டுக்கு 19.8 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது என்று  காந்திகிராம் கிராமப்புற நிறுவனத்தின் பொருளாதார பேராசிரியர் எஸ். ராஜேந்திரன் கூறினார்.

ஆனால் வங்காள தேசம், தாய்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து போட்டி அதிகரித்து வருகிறது.

பலாப்பழத்தின்  புதிய சர்வதேச புகழ் ஒரு  பெரிய திருப்புமுனையாகும், இது உள்ளூர் உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு ஏழை மனிதனின் பழமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு மரமும் ஒரு பருவத்தில் 150-250 பழங்களாக விளைவிக்கும் என கூறினார்.

ஆரோக்கிய நன்மைகள்

பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்: எடை குறைப்பு  முதல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்

  • பலாப்பழ விதைகள் புரதச்சத்து நிறைந்த மூலமாகும். மண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த மரம் உதவும்  இது காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை மற்றும் வறட்சியை எதிர்க்கும்.

  • பலாப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரைபோஃப்ளேவின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது. பழம் நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகும்.

  • பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.

  • பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைத்து நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

  • பலாப்பழத்தில் இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை கூர்மையைத் தடுக்கிறது. இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு பலாப்பழத்தை சரியான தேர்வாக ஆக்குகின்றன.இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு பலாப்பழம் உதவும்.

  • பலாப்பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன, இது இந்த இலக்கை அடைய உதவுகிறது.குறிப்பாக வைட்டமின் சி கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

  • பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி. பாட் அஸியம் சோடியத்தின் விளைவுகளை எதிர்கொள்வதன் மூலமும் இரத்த நாளங்களின் சுவர்களில் பதற்றத்தைக் குறைப்பதன் மூலமும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

  • பலாப்பழம் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவாகும், இது உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களுக்கு சரியானதாக அமைகிறது.