வானவில் : போர்ஷே ‘911 டர்போ எஸ்’


வானவில் : போர்ஷே ‘911 டர்போ எஸ்’
x
தினத்தந்தி 27 May 2020 12:22 AM GMT (Updated: 27 May 2020 12:22 AM GMT)

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்தாலும் சில நிறுவனங்கள் புதிய அறிமுகங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

போர்ஷே கார் நிறுவனம் புதிதாக ‘911 டர்போ எஸ்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3.08 கோடி. விருப்பமுள்ள கோடீஸ்வரர்கள் இதை ஆன்லைன் மூலம் வாங்கலாம்.

இதில் 3.8 லிட்டர் 6 திறன் கொண்ட என்ஜின் உள்ளது. இது 650 ஹெச்.பி. திறனையும், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக்கூடியது. 8 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்தக் காரை, ஸ்டார்ட் செய்து 2.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடலாம். அதேபோல 8.9 விநாடிகளில் 200 கி.மீ வேகத்தை எட்டிவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கி.மீ. ஆகும்.

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் அகலம் சற்று அதிகம். இதில் 20 அங்குல சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் 21 அங்குல சக்கரத்தையும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். பன்முக செயல்பாடுகளை ஒருங்கே கொண்ட ஸ்டீயரிங் வீல், 18 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான இருக்கைகள், 11 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஓடுபாதையை நிர்வகிக்கும் போர்ஷே டிராக் பிரிசிஷன் செயலி இதில் உள்ளது. சாகசப் பிரியர்களுக்கு ஏற்றதாக அறிமுகமாகியுள்ளது.

Next Story