வானவில் : பஜாஜ் பிளாட்டினா 100


வானவில் : பஜாஜ் பிளாட்டினா 100
x
தினத்தந்தி 27 May 2020 12:44 AM GMT (Updated: 27 May 2020 12:44 AM GMT)

பஜாஜ் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் பிளாட்டினா மோட்டார் சைக்கிளும் ஒன்றாகும். இந்த மாடல் 102 சி.சி. திறன் உள்ள ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

 தற்போது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதில் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது.

இது 7.9 பி.எஸ். திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 8.34 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். நான்கு கியர்களைக் கொண்டதாகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கி.மீ. செல்லக்கூடியதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகப்பு விளக்குடன் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு உள்ளது. அலாய் சக்கரம், இருவர் பயணிக்க வசதியாக நீளமான இருக்கை கொண்டதாக இது வந்துள்ளது. கிக்கர் மற்றும் செல்ப் ஸ்டார்ட்டர் வசதியுடன் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.47,765. செல்ப் ஸ்டார்ட்டர் மாடல் விலை சுமார் ரூ.55,545. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இது கிடைக்கும்.

Next Story