வானவில் : கோகிய் ‘வைடல் 3.0’ பிட்னெஸ் கைக்கடிகாரம்


வானவில் : கோகிய் ‘வைடல் 3.0’ பிட்னெஸ் கைக்கடிகாரம்
x
தினத்தந்தி 27 May 2020 2:09 AM GMT (Updated: 27 May 2020 2:09 AM GMT)

கோகிய் நிறுவனம் ஸ்மார் கைக்கடிகாரம் ‘வைடல் 3.0’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில் உடலின் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்போது உடலின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வசதி கொண்டது. தூக்க செயல்பாடுகளை கண்காணிக்கும், இதய துடிப்பை கண்காணிக்கும் தன்மை கொண்டது.

ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தகவல்களையும் இதில் பார்த்துக் கொள்ளலாம். அலாரம், அலெர்ட் வசதி கொண்டது. யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை செயல்படும். கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.3,999.

Next Story