‘செல்பி’ தண்டனை


‘செல்பி’ தண்டனை
x
தினத்தந்தி 30 May 2020 6:41 AM GMT (Updated: 30 May 2020 6:41 AM GMT)

தெருவில் அழகான பெண் நடந்து சென்றால், அவரை கேலி - கிண்டலுக்கு இலக்காக்குவது சிலரது வழக்கம். இதில் வெளிநாடுகளும் விதிவிலக்கல்ல. ஆனால் அதை நோவா ஜான்ஸ்மா எதிர்கொண்ட விதம்தான் ‘ஆஹா ரகம்’.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இந்த இருபது வயசு ‘ப்யூட்டி’ நோவா ஜான்ஸ்மாவின் உறுத்தாத அழகுக்கு அவர் எதிர்கொண்ட சீண்டல்கள் அதிகம். பொதுவாக பெண்கள் இதை அலட்சியப்படுத்துவார்கள்.

ஆனால், நோவா மாற்றி யோசித்தார். தன்னை கிண்டல் செய்பவர்களுடன் ஜாலியாக செல்பி எடுத்துக் கொண்டார். சீண்டல் ஆட்களும் பின்விளைவு தெரியாமல் போஸ் கொடுத்தனர்.

பின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் திறந்து போட்டோக்களுடன் சீண்டல் கமெண்டுகளையும் பதிய, செம வைரல். ஜனவரி மாதம் முதல் நெதர்லாந்தில் பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா? ரூ.14,370.

இப்போது நோவை சீண்டிய அத்தனை ஆண்களும் அபராதம் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!


Next Story