தேசிய செய்திகள்

பீகார் அரசியல் : கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் கனவில் தேஜஸ்வி யாதவ் + "||" + Bihar Election 2020: Did you know Tejashwi Yadav was in Delhi Daredevils' squad in IPL?

பீகார் அரசியல் : கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் கனவில் தேஜஸ்வி யாதவ்

பீகார் அரசியல் : கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் கனவில் தேஜஸ்வி யாதவ்
பீகார் அரசியலில் கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் போட்டியாளராக தேஜஸ்வி யாதவ் கடந்து வந்த பாதை
பாட்னா

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. 

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும்  எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

 38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள  வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

தேர்தலில் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தேஜஸ்வி யாதவ் அங்கம் வகிக்கும்  மெகா கூட்டணி இடையேயும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மெகா கூட்டணி 117  -இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி - 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

31 வயதான தேஜஸ்வி யாதவ் நேற்று தான் தனது பிறந்த நாளை அவரது தொண்டர்கள் நேற்றே அவரை முதல்வராக சித்தரித்து  மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர்.  

இந்த் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் புதிய ஸ்டாராக உருவெடுத்து உள்லார். அவரது தேர்தல்பிரச்சாரங்களும் மக்களிடையே பேசப்பட்டது. மோடியை தாக்காமல் நிதிஷ்குமாரை மட்டுமே தாக்கி அவர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார்.

உள்ளூர் வளர்ச்சி, வேலையின்மை, ஊழல், பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய பிரச்சினைகளை  அவர் தனது பிரச்சாரங்களில் எழுப்பினார், இவை அனைத்தும் சாதாரண மனிதர்களின் இதயத்தைத் தொட்டன. பாஜகவும் யோகியும் பேரணிகளில் எழுப்பத் தொடங்கிய தேசிய பிரச்சினைகள் குறித்து பேச அவர் விரும்பவில்லை.

31 வயதான தேஜஸ்வி யாதவ் அரசியலில் நுழைவதற்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் தன்னை  தீவிரமாக ஈடுபடுத்திகொண்டு இருந்தார். 

மதுரா சாலையில் டெல்லி பப்ளிக் பள்ளியில்  படிக்கும் போது, நீண்ட தலைமுடியுடன் தேஜஸ்வி யாதவ் மற்ற குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் கிரிக்கெட்டில் ஏதாவது செய்வார் என்று நம்பப்பட்டது, ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. அவர் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

தேஜஸ்வி யாதவ் ஐபிஎல் நான்கு சீசன்களில் (2008-12) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.  ஆனால் அணியின் லெவனில் அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் பேட்டிங் தவிர, அவர் பந்தும் வீசுவார்.

ஐ.பி.எல்லில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக களத்தில் விளையாடவில்லையே என்ற கேள்விக்கு, தந்தை லாலு பிரசாத்  ஒரு கூடுதல் வீரராக அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைத்தது, அவர் பானங்கள் வழங்குபவர் என்று கூறினார்.

தேஜஸ்வி முதல் தர போட்டியில் விளையாட முடிந்தது. ரஞ்சி டிராபி  லீக்கில் விதர்பாவுக்கு எதிராக ராஞ்சியில் களம் இறங்கி உள்ளார். 2009 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் அணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தனது முதல் இன்னிங்சில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது  அதில் எல்பிடபிள்யூ ஆனார் பந்து வீசும்போது, விதர்பாவின் முதல் இன்னிங்சில் 5 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்தார், ஆனால் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் தேஜஸ்வி 19 ரன்கள் எடுத்தார்.

இது தவிர, தேஜஸ்வி இரண்டு முதல் தர போட்டிகளிலும் (உள்நாட்டு ஒருநாள் போட்டிகளிலும்) நான்கு  20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேஜஸ்வியின் கிரிக்கெட் வாழ்க்கை அவர் எதிர்பார்த்த உயரங்களைத் அடையவில்லை. 

2010 இல் ஐபிஎல் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், தேஜஸ்வி அப்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தைக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். லாலு தனது மகனை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் என்பது அப்போதே தெளிவாகத் தெரிந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு
அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
3. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்
இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
5. நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் பாராட்டு
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.