சிறப்புக் கட்டுரைகள்

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 3 பிளஸ் + "||" + Mahindra Scorpio S3 Plus

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 3 பிளஸ்

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 3 பிளஸ்
மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ மாடல் மிகவும் பிரபலமானது. இதில் தற்போது எஸ் 3 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.70 லட்சம். ஏற்கனவே உள்ள எஸ் 5 பிளஸ் மாடலின் விலையை விட இதன் விலை ரூ.55 ஆயிரம் குறைவாகும். பாரத் புகை விதி 6 அமல்படுத்தப்பட்டதன் காரணமாக எஸ் 3 டிரிம் மாடல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்போது நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக் கியதாக எஸ் 3 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது. இது 120 ஹெச்.பி. மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஸ்டீரிங் கொண்டது. ஸ்டார்ட் மற்றும் ஆப் செய்வதற்கு மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் 7 பேர் மற்றும் 9 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.