டிஜிட்டல் கூல் நுட்பத்தில் சாம்சங் பிரிட்ஜ்


டிஜிட்டல் கூல் நுட்பத்தில் சாம்சங் பிரிட்ஜ்
x
தினத்தந்தி 3 March 2021 4:56 PM GMT (Updated: 3 March 2021 4:56 PM GMT)

சாம்சங் நிறுவனம் டிஜிட்டல் கூல் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஒற்றை கதவுடன் கூடிய ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம் டிஜிட்டல் கூல் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஒற்றை கதவுடன் கூடிய ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டதாக (5 இன் 1) இந்த பிரிட்ஜ் திகழ்கிறது. இதில் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பமான டிஜிட்டல் டச் தொழில்நுட்பம் உள்ளது. கதவைத் திறக்காமலேயே பிரிட்ஜ் குளிர் நிலையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளதால், பிரிட்ஜினுள் தொடர்ந்து குளிர் நிலை மாறாமலிருக்கும். இதன் தொடக்க விலை சுமார் ரூ.17,990.

முன்புற கதவில் அழகிய வண்ண பூக்கள் கொண்ட பெயிண்டிங் இடம்பெற்றுள்ளது. இது சமையலறைக்கு மேலும் அழகு சேர்க்கும். மற்ற பிரிட்ஜ்களைக் காட்டிலும் 53 சதவீதம் விரைவாக ஐஸ் தயாரிக்க இது உதவும். அத்துடன் 33 சதவீதம் விரைவாக இது குளிர்வடையும். மின்னழுத்த வேறுபாடு காரணமாக ஏற்படும் மாற்றங்களை தாக்குப்பிடிக்கும். அத்துடன் அவ்வித வேறுபாடுகளையும் இது உணர்த்தும். இரவு நேரங்களில் மின்சாரத்தை சேமிக்க இதன் செயல்பாடுகளில் எகோ மோட் எனும் வசதியைப் பயன்படுத்து வதன் மூலம் 28 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். சாம்சங் பிரிட்ஜ்களில் அதிக பிரபலமானது கர்ட் மாஸ்ட்ரோ மாடலாகும்.

இது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நுட்பமாக விளங்குவதால் அனைத்து தயாரிப்புகளிலும் இந்த நுட்பத்தை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டு அத்தகைய தொழில்நுட்ப வசதி இந்த பிரிட்ஜிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சமையலறைகளில் ஒற்றைக் கதவுடனான பிரிட்ஜ்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் டச் நுட்பத்தை உள்ளடக்கியதாக இந்த பிரிட்ஜை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இது 198 லிட்டர் மற்றும் 225 லிட்டர் அளவுகளில் கிடைக்கிறது. கம்ப்ரஸருக்கு 10 ஆண்டு உத்திரவாதம் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story