டிரையம்ப் போனவில்லே ஸ்ட்ரீட் டுவின்


டிரையம்ப் போனவில்லே ஸ்ட்ரீட் டுவின்
x
தினத்தந்தி 3 March 2021 5:16 PM GMT (Updated: 3 March 2021 5:16 PM GMT)

பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுள்ளதாக அறிமுகமாகியுள்ளது.

டிரையம்ப் நிறுவனம் போனவில்லே ஸ்ட்ரீட் டுவின் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுள்ளதாக அறிமுகமாகியுள்ளது.

இது 65 ஹெச்.பி. திறனையும், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசைையயும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் இருக்கை அமைப்பு களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சொகுசான பயணத்துக்கு ஏற்ப போம் அளவு 10 மி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது அலாய் சக்கரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது 900 சி.சி. திறன் கொண்டது. இதில் முந்தைய மாடலை விட ஆர்.பி.எம். சுழற்சி 100 ஆர்.பி.எம். அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் கிளட்ச் வசதியோடு 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது.

இதில் இரண்டு விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. இது தவிர போனவில்லே ஸ்ட்ரீட் டுவின் கோல்ட் லைன் என்ற ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் சர்வதேச அளவில் மொத்தம் 1,000 மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போனவில்லே ஸ்ட்ரீட் டுவின் மாடல் விற்பனை விலை சுமார் ரூ.7.45 லட்சம். கோபால்ட் நீலம், மேட் அயர்ன் ஸ்டோன், ஜெட் பிளாக் உள்ளிட்ட 3 கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது. 


Next Story