டொயோட்டா ஹியாஸ் அறிமுகம்


டொயோட்டா ஹியாஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 3 March 2021 5:37 PM GMT (Updated: 3 March 2021 5:37 PM GMT)

சர்வதேச அளவில் 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போதுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் புதிதாக ஹியாஸ் என்ற பெயரில் 14 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு வேனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.55 லட்சம். எம்.பி.வி. மாடலாக 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது அறிமுகமாகிறது. சர்வதேச அளவில் 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போதுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த மாடலில் இது 5-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். இதற்கடுத்த 6-வது தலைமுறை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் முந்தைய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 151 ஹெச்.பி. திறன் கொண்டது. 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இனோவா மாடல்களில் இத்தகைய என்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களில் இது கிடைக்கும்.

இதில் கடைசி வரிசை மடக்கும் வகை யிலானது. இதனால் பயணிகள் குறைவாக இருக்கும்போது கடைசி வரிசையில் பொருட்களை அதிகம் வைக்க முடியும். இதில் 2 டின் ஆடியோ சிஸ்டம், சி.டி. மற்றும் யு.எஸ்.பி. பயன்படுத்தும் வகையில் உள்ளது. முன்புறம் 2 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. வசதிகள் கொண்டது. பக்கவாட்டுப் பகுதி கதவுகளைக் கொண்டது.

Next Story