சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் + "||" + Realmi 8 smartphone

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்
பின்பகுதியில் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.
புதிதாக ரியல்மி 8 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இது 6.4 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 பிராசஸர் உள்ளது. இதன் பின்பகுதியில் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது.

இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆக 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜர் உள்ளது. இதனால் 65 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். 4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாக வந்துள்ளது. கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.14,999.