சிறப்புக் கட்டுரைகள்

ஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் + "||" + A.S.U.S. Desktop computer

ஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

ஏ.எஸ்.யு.எஸ். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் நவீன வடிவமைப்பிலான டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
ஏ.எஸ்.யு.எஸ். ஏ.ஐ.ஓ. வி 241 என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த கம்ப்யூட்டரின் விலை சுமார் ரூ.61,990. இரண்டு கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. இதில் 11-வது தலைமுறை டைகர் லேக் ஐ 5 பிராசஸர் உள்ளது. அத்துடன் இன்டெல்லின் ஐரிஸ் எக்ஸ்.இ. உள்ளது.

இது அதிநவீன கிராபிக் ரெசல்யூஷனுக்கு உதவுகிறது. 23.8 அங்குல திரையைக் கொண்டுள்ள இதில் 3 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. தினசரி பயன்படுத்த வசதியாக இதற்கு வயர்லெஸ் கீ போர்டு உள்ளது. இது நாள்முழுவதும் பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி.
ஏ.எஸ்.யு.எஸ். தயாரிப்பாக ஆர்.ஓ.ஜி. ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகியுள்ளது.