சிறப்புக் கட்டுரைகள்

பெனலி டி.ஆர்.கே 502 எக்ஸ். + "||" + Benelli D.R.K. 502X.

பெனலி டி.ஆர்.கே 502 எக்ஸ்.

பெனலி டி.ஆர்.கே 502 எக்ஸ்.
பெனலி நிறுவனம் தனது டி.ஆர்.கே 502 மாடல் மோட்டார் சைக்கிளை பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5.20 லட்சம். இதில் மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய சுவிட்ச் கியர் உள்ளன.

இது 499.6 சி.சி. திறன் கொண்டது. லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 47.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி. எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். ஏற்கனவே சந்தை யில் உள்ள கவாஸகி வெர்சிஸ் 650, சுஸுகி வி ஸ்டார்ம் 650 எக்ஸ்.டி., ஹோண்டா சி.பி 500. எக்ஸ் ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.