சிறப்புக் கட்டுரைகள்

இரட்டை வண்ணத்தில் டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி + "||" + In double color TVS Star City

இரட்டை வண்ணத்தில் டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி

இரட்டை வண்ணத்தில் டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது ஸ்டார் சிட்டி மோட்டார் சைக்கிளாகும்.
தற்போது இது இரட்டை வண்ணத்தில் (கருப்பு-சிவப்பு) அறிமுகமாகியுள்ளது. இது தவிர நீலம்-சில்வர் வண்ணத்திலும் இது கிடைக்கும். இந்த கண்கவர் வண்ண மோட்டார் சைக்கிள் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் மாடலில் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும். கருப்பு வண்ணத்திலான அலாய் சக்கரங்கள் இதன் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றுகிறது.

அதேபோல எக்ஸாஸ்ட் மற்றும் கருப்பு நிறத்திலான என்ஜின் இதற்கு ஸ்போர்டிவ் தோற்றத்தை அளிக்கிறது. இரட்டை வண்ணத்தில் இது அறிமுகமானாலும் விலையில் எவ்வித மாற்றத்தையும் இந்நிறுவனம் செய்யவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கண்கவர் வண்ண மோட்டார் சைக்கிளை தேர்வு செய்யலாம்.

டிரம் பிரேக் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.65,865. டிஸ்க் பிரேக் மாடலின் விலை சுமார் ரூ.68,465. எல்.இ.டி. முகப்பு விளக்கு, இருவர் சவுகரியமாக பயணிக்க வசதியான நீளமான இருக்கை, இரட்டை வண்ணத்திலான ரியர் வியூ கண்ணாடி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. சார்ஜர் ஆகிய வசதிகளோடு பராமரிப்பு தேவைப்படாத பேட்டரியுடன் இது வந்துள்ளது. இது 110 சி.சி. ஒற்றை சிலிண்டர் எகோ திரஸ்ட் என்ஜினைக் கொண்டுள்ளது.

இதில் டி.வி.எஸ். நிறுவனத்தின் இ.டி.எப்.ஐ. தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது 8.08 பி.ஹெச்.பி. திறனையும், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. நான்கு கியர்களைக் கொண்டுள்ளது. இதன் பின்புற ஷாக் அப்சார்பர் 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது.