சோனி பிராவியா எக்ஸ் 75 ஸ்மார்ட் டி.வி.


சோனி பிராவியா எக்ஸ் 75 ஸ்மார்ட் டி.வி.
x
தினத்தந்தி 28 April 2021 5:18 PM GMT (Updated: 28 April 2021 5:18 PM GMT)

சோனி நிறுவனம் பிராவியா மாடலில் எக்ஸ் 75 ஆண்ட்ராய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதில் எக்ஸ் 1 மற்றும் 4-கே பிராசஸர் உள்ளது.

துல்லியமான இசைக்கு டால்பி ஆடியோ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ் 75 சீரிஸ் மாடல் 43 அங்குலம் மற்றும் 50 அங்குல அளவில் வந்துள்ளது. இதில் லைவ் கலர் தொழில்நுட்பம் உள்ளதால், நேரலை ஒளிபரப்பில் காட்சிகள் துல்லியமாகத் தெரியும்.

மேலும் இதில் 4-கே புரோ என்ஜின் உள்ளதால் காட்சிகள் பளிச்சென தெரிவதோடு கண்களுக்கு உறுத்தாத தன்மையுடன் இருக்கும். ஆண்ட்ராய்டு டி.வி.யாக இருப்பதால் பிற இணைப்புகளுக்கு பிரச்சினை இருக்காது. மேலும் உள்ளீடாக பேபில் ஸ்பீக்கர் உள்ளது. இது டால்பி ஆடியோ தொழில்நுட்பத்தின் சிறப்பை மேலும் மெருகேற்றி துல்லியமான இசைக்கு வழியேற்படுத்துகிறது. 50 அங்குல டி.வி.யின் விலை சுமார் ரூ.72,990. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.59,990.

Next Story