ஓப்போ ஏ 54 ஸ்மார்ட்போன்


ஓப்போ ஏ 54 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 28 April 2021 5:21 PM GMT (Updated: 28 April 2021 5:21 PM GMT)

ஓப்போ நிறுவனம் ஏ 54 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 அங்குல ஹெச்.டி. திரை உள்ளது. இதன் பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

ஹீலியோ பிராசஸர் 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 18 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜருடன் வந்துள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. செல்பி பிரியர்களுக்காக முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

கருப்பு, நீலம், தங்க நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,490. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.15,990.

Next Story