சிறப்புக் கட்டுரைகள்

வங்கியில் 5454 கிளார்க் பணி இடங்கள் + "||" + 5454 Clark at the bank Work places

வங்கியில் 5454 கிளார்க் பணி இடங்கள்

வங்கியில் 5454 கிளார்க் பணி இடங்கள்
ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர் சப்போர்ட் அண்டு சேல்ஸ்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மொத்தம் 5454 கிளார்க் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) சார்பில் பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர் சப்போர்ட் அண்டு சேல்ஸ்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மொத்தம் 5454 கிளார்க் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னைக்கு 475 காலி பணி இடங்கள் உள்ளன. 1-4-2021 அன்றைய தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வும் உண்டு. பட்டப்படிப்பு முடித்தவர்களும், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேவேளையில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தேர்ச்சி பெற்றதற்கான விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் விதம், ஆன்லைன் தேர்வு விவரம் உள்பட மேலும் விரிவான விவரங்களை https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-5-2021.