அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 125


அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 125
x
தினத்தந்தி 6 May 2021 5:33 AM GMT (Updated: 6 May 2021 5:33 AM GMT)

அப்ரிலியா இந்தியா நிறுவனம் புதிதாக எஸ்.எக்ஸ்.ஆர் 125 மாடலை அறிமுகம் செய்து உள்ளது.

இதற்கான முன்பதிவும் துவங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.15 லட்சம்.

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.11 ஆயிரம் குறை வாகும். இது 9.9 ஹெச்.பி. திறனையும், 9.7 நியூட் டன் மீட்டர் டார்க் இழு–விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதன் பெட்ரோல் டேங்க் 7 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

எல்.இ.டி. விளக்குகள், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய வசதியாக யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி கொண்டது. புளூடூத் இணைப்பு வசதி, ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி (சி.பி.எஸ்.) உள்ளது. மேட் கருப்பு, கிளாசி வெள்ளை, மேட் நீலம், மேட் சிவப்பு ஆகிய நிறங்களில் வந்துள்ளது.

Next Story