ஹூண்டாய் அல்கஸார்


ஹூண்டாய் அல்கஸார்
x
தினத்தந்தி 6 May 2021 5:52 AM GMT (Updated: 6 May 2021 5:52 AM GMT)

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் என்ற பெயரில் புதிய மாடல் எஸ்.யு.வி. காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் மூன்று வரிசையில் இருக்கைகள் உள்ளன. 6 பேர் முதல் 7 பேர் வரை சவுகரியமாக பயணிக்கலாம். இது 2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹெக்டார் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500, டாடா சபாரி ஆகிய மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 10.25 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இதில் 360 டிகிரி சுழலும் கேமரா, திறந்து மூடும் மேற்கூரை, குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் இருக்கை, வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது. டீசல் என்ஜின் மாடல் 2 லிட்டர் என்ஜினைக் கொண்டுள்ளது.

இது 159 ஹெச்.பி. திறனையும், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. பெட்ரோல் மாடலைப் பொருத்தமட்டில் 1.5 லிட்டர் என்ஜின் உள்ளது. இது 115 ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story