புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 220 எப்


புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் 220 எப்
x
தினத்தந்தி 6 May 2021 5:55 AM GMT (Updated: 6 May 2021 5:55 AM GMT)

பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர்களிடம் பெருமளவு வரவேற்பை பெற்ற மாடல் பல்சர்.

இதில் 220 எப் மாடல் மோட்டார் சைக்கிள் புதிய வண்ணத்தில் இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் அறிமுகமாகியுள்ளது. எரிமலை சிவப்பு, முத்து வெள்ளை, மின்னும் கருப்பு, சபையர் நீலம் ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,28,250. புதிய வண்ணங்களில் வந்துள்ள பல்சர் 220 எப் மாடல் மிக அழகிய தோற்றப் பொலிவைக் கொண்டுள்ளது.

இது 220 சி.சி. திறன் கொண்டதாக ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன், 2 வால்வு, 2 ஸ்பார்க் பிளக்குகளை உடையதாக விளங்குகிறது. இது 20.4 பி.எஸ். திறனை 8500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 18.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இதில் பகுதியளவு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இருவர் பயணிக்கும் வகையிலான தனித்தனி இருக்கைகள் இதன் சிறப்பம்சமாகும். மிகச்சிறந்த தோற்றத்துடன் இது வெளிவந்துள்ளது.

Next Story