ஐ-கியரின் வின்டேஜ் வைப்ஸ்


ஐ-கியரின் வின்டேஜ் வைப்ஸ்
x
தினத்தந்தி 12 May 2021 10:23 AM GMT (Updated: 12 May 2021 10:23 AM GMT)

அந்த நாளில் ரேடியோ என்றழைக்கப்படும் வானொலி ஒன்றுதான் பொழுது போக்கு அம்சம்.

1960-களில் பிறந்தவர்களுக்கு வால்வு ரேடியோ குறித்து நன்கு அறிவார்கள். அந்த நாளில் ரேடியோ என்றழைக்கப்படும் வானொலி ஒன்றுதான் பொழுது போக்கு அம்சம். அந்நாளில் இத்தகைய வானொலிப் பெட்டி வைத்திருக்கும் வீடுகள் மிகுந்த அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டதும் உண்டு. இதுபோன்ற புராதன தோற்றத்துடன் நவீன கால ரேடியோவை வடிவமைத்து வெளியிட்டுள்ளது ஐ-கியர் நிறுவனம். வின்டேஜ் வைப்ஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த ரேடியோ நவீன காலத்துக்கேற்ப புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. எம்.பி 3 வசதியும் இதில் உள்ளது.

மேலும் அவசரத்துக்கு உதவும் வகையில் டார்ச் வசதியும் இதில் உள்ளது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லும் வகையில் எடை குறைவானதாக அதேசமயம் துல்லியமான இசையை வெளிப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

வானொலி நிலையங்களின் பண்பலை உள்ளிட்ட 7 அலை வரிசைகளின் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழலாம். இதன் விலை சுமார் ரூ.2,250. தொலை தூரத்திலும் செயல்படும் வகையில் இதில் டெலஸ்கோப்பிக் ஆன்டெனாவும் உள்ளது. அந்தக் கால வானொலிப் பெட்டியில் உள்ளதைப் போன்று டயல் மற்றும் சுவிட்ச்களும் வடிவமைக்கப் பட்டுள்ளது இதற்கு புராதன தோற்றத்தை அளிக்கிறது.

இதில் யு.எஸ்.பி. பென் டிரைவ் மூலம் பாடல்களை கேட்டு மகிழும் வசதியும் உள்ளது. இதை சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. திறந்த வெளிப் பகுதியில் செல்லும்போது இதன் மேல்புறம் உள்ள சூரிய தகடு மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். இதை இயக்க பேட்டரி பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

Next Story