திராட்சை: கனிகளின் இளவரசி


திராட்சை: கனிகளின் இளவரசி
x
தினத்தந்தி 12 Jun 2021 11:18 AM GMT (Updated: 12 Jun 2021 11:18 AM GMT)

கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு உண்டு. சிறு உருண்டைகளாக திரண்ட கொத்தாக இருக்கும் திராட்சையை, ‘சத்துக்களின் கொத்து’ என்று புகழ்ந்தால் மிகையில்லை. அந்த அளவிற்கு சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது. அவற்றிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோமா...

திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வரடிரால்’ எனும் நோய் எதிர்ப்புபொருள் தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.

நுண் ஊட்டச்சத்துக்களான தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. உலர் திராட்சையில் அதிக அளவு இரும்புத்தாது கிடைக்கிறது. மேலும் 100 கிராம் திராட்சையில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது. ‘வைட்டமின்-சி’, ‘வைட்டமின்-ஏ’, ‘வைட்டமின்-கே’ மற்றும் பி-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது.

Next Story