மூன்று வேரியன்ட்களில் பி.எம்.டபிள்யூ. எஸ். 1000 ஆர்.


மூன்று வேரியன்ட்களில் பி.எம்.டபிள்யூ. எஸ். 1000 ஆர்.
x
தினத்தந்தி 23 Jun 2021 1:16 AM GMT (Updated: 23 Jun 2021 1:16 AM GMT)

பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எஸ். 1000 ஆர். மாடலை 3 வேரியன்ட் களில் அறிமுகம் செய்துள்ளது.

அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.17.90 லட்சம். புரோ மாடல் விலை சுமார் ரூ.19.75 லட்சம், புரோ எம் ஸ்மார்ட் விலை சுமார் ரூ.22.50 லட்சம்.

இதில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது யூரோ 5 மற்றும் பாரத் புகைவிதி 6 ஆகியவற்றுக்கேற்ப உருவாக்கப் பட்டுள்ளது.

இது 165 ஹெச்.பி. திறனை 11 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சி அடிப்படையிலும், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9250 ஆர்.பி.எம். சுழற்சி அடிப்படையிலும் வெளிப்படுத்தும். இதில் டி.டி.சி., ஏ.பி.எஸ். பிரேக்கிங் வசதி உள்ளது. மூன்று வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன. மழைக்காலம், சாலை மற்றும் டைனமிக் என மூன்று வித ஓட்டும் நிலையை தேர்வு செய்யலாம். முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்கு ஆகியன மிகச் சிறந்த தோற்றப் பொலிவை இந்த மோட்டார் சைக்கிளுக்கு அளிக்கிறது.

Next Story