சிறப்புக் கட்டுரைகள்

ஹெச்.பி. ஏரோ 3 லேப்டாப் + "||" + H.P. Aero 3 laptop

ஹெச்.பி. ஏரோ 3 லேப்டாப்

ஹெச்.பி. ஏரோ 3 லேப்டாப்
ஹெச்.பி. ஏரோ 3 லேப்டாப்.
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக ஏரோ 3 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் எடை குறைவான லேப்டாப்பாகும். இது 13.3 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஏ.எம்.டி. ரைஸென் பிராசஸர் உள்ளது.


வை-பை இணைப்பு, விண்டோஸ் 10 இயங்கு தளம் உடையது. தேவைப்பட்டால் விண்டோஸ் 11 இயங்குதளத்துக்கு இதை மாற்றிக் கொள்ளலாம். இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படும். தங்க நிறம், வெள்ளை, சில்வர் வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.55,653.