கிராவ்டன் பேட்டரி மோட்டார் சைக்கிள்


கிராவ்டன் பேட்டரி மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 15 July 2021 10:10 AM GMT (Updated: 15 July 2021 10:10 AM GMT)

ஹைதராபாத்தைச் சேர்ந்த கிராவ்டன் நிறுவனம் பேட்டரியை மாற்றும் வகையிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. கிராவ்டன் குவான்டா என்ற பெயரில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையக விலை சுமார் ரூ.99 ஆயிரம்.

சிவப்பு, வெள்ளை, கருப்பு உள்ளிட்ட 3 வண்ணங்களில் வந்துள்ளது. இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள முதலாவது மோட்டார் சைக்கிள் இதுவாகும். இந்திய சாலைகளுக்கென வடிவமைக்கப்பட்டதாகும்.
இதன் சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் இந்திய சாலைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆகும். இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

இதில் 3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கழற்றி மாட்டும் வகையில் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் நிலையைத் தேர்வு செய்தால் 90 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும். சாதாரண நிலையில் இது சார்ஜ் ஆக 3 மணி நேரம் போதுமானது. பேட்டரிக்கு 5 
ஆண்டு உத்திரவாதத்தை இந்நிறுவனம் அளிக்கிறது.

இந்நிறுவனம் ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளது. அதில் வாகனம் பழுதானால் சரி செய்வதற்கு அருகிலுள்ள மெக்கானிக் ஷாப் மற்றும் பேட்டரி மாற்றும் வசதி உள்ள இடம் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்டெப் த்ரூ மாடலாக இது உள்ளது. அனைத் துக்கும் மேலாக இது சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Next Story