லம்போர்கினி அவன்டேடர் அல்டிமேட்


லம்போர்கினி அவன்டேடர் அல்டிமேட்
x
தினத்தந்தி 21 July 2021 6:56 AM GMT (Updated: 21 July 2021 6:56 AM GMT)

ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் லம்போர்கினி நிறுவனம் அவன்டேடர் எல் பி 780 அல்டிமேட் என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

இதில் வி 12 சூப்பர் கம்பஸ்டன் என்ஜின் உள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக இது வெளிவந்துள்ளது. ஸ்டார்ட் செய்து 2.8 விநாடிகளில் இது 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். 8.7 விநாடிகளில் இது 200 கி.மீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 355 கி.மீ. ஆகும்.

இது 12 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. கார்பன் பைபரால் ஆனது. இதனால் இதன் எடை (1,550 கி.கி.) குறைவாக உள்ளது. 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பிரேக் பிடித்தால் 30 மீட்டருக்குள் கார் நின்றுவிடும் வகையில் சி.சி.பி. பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்புற பம்பர் காற்றை கிழித்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story