சிறப்புக் கட்டுரைகள்

யமஹா எப்.இஸட். மோட்டோ ஜி.பி. எடிஷன் + "||" + Yamaha FZ MotoGP Edition

யமஹா எப்.இஸட். மோட்டோ ஜி.பி. எடிஷன்

யமஹா எப்.இஸட். மோட்டோ ஜி.பி. எடிஷன்
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள யமஹா எப்.இஸட். மாடலில் தற்போது மோட்டோ ஜி.பி. எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,36,800. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்த மாடலை தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. பெட்ரோல் டேங்க், பக்கவாட்டுப் பகுதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இது ரேஸ் மோட்டார் சைக்கிளைப் போன்று தோற்றமளிக்கிறது. பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 249 சி.சி. ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டிரோக் என்ஜின் உள்ளது.

இது 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 20.8 பி.எஸ். திறனை வெளிப்படுத்தக் கூடியது. அதேபோல 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். பன்முக செயல் திறன் கொண்ட எல்.சி.டி. இன்ஸ்ட்மென்ட் கிளஸ்டர், பகலில் ஒளிரும் எல்.டி.இ. விளக்கு, இரட்டை செயல்பாடு உடைய முகப்பு விளக்கு, சைடு ஸ்டாண்டு இருந்தால் வாகனம் இயங்காத நுட்பம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.